தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாதனை மாணவர்களுக்கு லேப்டாப்

சாதனை மாணவர்களுக்கு லேப்டாப்

சாதனை மாணவர்களுக்கு லேப்டாப்


UPDATED : மே 28, 2011 12:00 AM

ADDED : மே 28, 2011 11:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2011 12:00 AM ADDED : மே 28, 2011 11:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில், மண்டலங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதைத் தொடர்ந்து மேயர் மா.சுப்பிரமணியனை ரிப்பன் கட்டடத்தில் பத்தாம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


அப்போது 100 சதவீத தேர்ச்சி பெற்ற ஹரி நாராயணபுரம் சென்னை உயர்நிலைப்பள்ளியும், வன்னிய தேனாம்பேட்டை சென்னை உயர்நிலைப்பள்ளியும், வி.பி.கோவில் தெரு சென்னை உயர்நிலைப்பள்ளியும், கே.பி.தெரு சென்னை உயர்நிலைப்பள்ளியும் முதல் தர வரிசை தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளன. இந்த 4 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் காசோலையை மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.


பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:  சென்னை பள்ளிகள் சென்ற ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.3 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இந்த ஆண்டு 86.3 சதவீதம் தேர்ச்சி பெற்று, புதிய சாதனை படைத்துள்ளது. கூடுதலாக ஒரு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.


அதைப்போல், சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 4 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு, பள்ளி வளர்ச்சிக்காக தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது.


சென்னை பள்ளிகளில் 400-க்கும் அதிகமான மதிப்பெண்களை 1,438 மாணவ, மாணவிகள் பெற்று, புதிய சாதனை படைத்துள்ளனர். சென்ற ஆண்டைக் காட்டிலும் 300 பேர் அதிகம். சென்னை பள்ளிகளில் தனிப்பாடங்களில் 100 சதவீத மதிப்பெண்கள் 81 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். சென்ற ஆண்டைக் காட்டிலும் 44 பேர் அதிகம். தமிழக அரசின் பள்ளிகளின் ஜுன் மாதம் 15-ந் தேதி திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


சென்னை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படுவதற்காக வரும் ஜுன் மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கப்படும். மண்டலங்களில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10 மண்டலங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us