தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


UPDATED : ஆக 04, 2011 12:00 AM

ADDED : ஆக 04, 2011 02:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2011 12:00 AM ADDED : ஆக 04, 2011 02:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவரின் பெற்றோர் ஒருவர், கல்விக் கட்டண நிர்ணயக் குழு நியமித்த கட்டணத்தை பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறி தொடுத்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கட்டண நிர்ணயக் குழு இப்போது நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே பள்ளி நிர்வாகம் வசூலிக்க வேண்டும்.

நாட்டில் உள்ள 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய, இலவச கல்வி பெறும் உரிமை உள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உள்ளது.

இந்த நிலையில், பள்ளி நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தவில்லை என்பதற்காக மாணவரை பள்ளியில் இருந்து வெளியேற்ற முடியாது.

கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு மாணவனை வகுப்பில் அனுமதிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் மேல்முறையீட்டின் அடிப்படையில் கூடுதல் கல்வக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால் அந்த கூடுதல் தொகையை பின்னர் மனுதாரரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us