தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொலைநிலைக் கல்வி சரியானதா?

தொலைநிலைக் கல்வி சரியானதா?

தொலைநிலைக் கல்வி சரியானதா?


UPDATED : ஆக 27, 2011 12:00 AM

ADDED : ஆக 27, 2011 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2011 12:00 AM ADDED : ஆக 27, 2011 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல லட்சக்கணக்கான பேர் இக்கல்விமுறையின் அங்கத்தினர்களாக இருந்தபோதிலும், இக்கல்விக்கு சமூகத்தில் போதிய அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்குமா? என்பது பலரின் சந்தேகமாகவே இருக்கிறது. எனவே, தொலைதூரக் கல்வியின் நிலைப் பற்றி அலசுகிறது இக்கட்டுரை.

போதிய ஆதரவின்மை

தொலைதூரக் கல்வியில் பட்டம் பெறுவதென்பது, நேரடி படிப்பில் பட்டம் பெறுவதுடன் ஒப்பிடுகையில், சற்று தரம் குறைந்ததாக கருதப்படுவதற்கு காரணம், தொலைநிலைக் கல்வித் துறைகளுக்கு, போதுமான வசதிகள் செய்து தரப்படாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். பல கல்வி நிறுவனங்களில், தொலைநிலைக் கல்விக்கு குறைந்தளவே, முக்கியத்துவமும், ஆதரவும் தரப்படுகிறது.

ஏன் தொடர்கிறது?

தொலைநிலைக் கல்விமுறையிலான பட்டத்திற்கு, நேரடி கல்விமுறையில் பெறும் பட்டத்தின் அளவிற்கு மதிப்பில்லையெனினும், இந்தியாவில் தொலைநிலைக் கல்வி என்பது இன்னும் பிரபலமாகவே இருப்பதற்கு காரணம், பட்டப்படிப்பின் மீது இந்தியர்களுக்கு இருக்கும் ஆர்வமும், மோகமும்தான் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பலவிதமான வயதினருக்கும், எப்படியாவது பட்டப்படிப்பை முடித்து, ஒரு பட்டம் பெற்றுவிட வேண்டும் என்ற ஆவல் இந்தியாவைப் பொறுத்தவரை நிறையவே இருக்கிறது.

ஹோட்டல் மேலாண்மை, உட்புற அலங்காரம், வணிகரீதியான கலை டிப்ளமோ போன்ற படிப்புகளை மேற்கொண்டிருக்கும் மாணவர்கள்கூட, கூடுதலாக ஒரு பட்டப்படிப்பை மேற்கொள்கிறார்கள். எதிர்கால தொழில்ரீதியாக அது அவர்களுக்கு தேவையில்லை என்றாலும், நல்ல வேலையைப் பெறுவதற்கும், பதவி உயர்விற்கும், சம்பள உயர்விற்கும் அது அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. பல நிறுவனங்களும், பட்டம்பெற்ற பணியாட்களுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றன. இதுபோன்ற காரணங்கள்தான், தொலைநிலைக் கல்விமுறை இந்தியாவில் நிலைத்திருப்பதற்கு காரணம்.

தொழில்நுட்ப வளர்ச்சி

கல்வித்துறையில் தொழில்நுட்பமானது, அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், 4 சுவர்களுக்கு இடையே அமர்ந்து படிக்கும் கல்விதான் சிறந்தது என்ற எண்ணம் வலுவிழந்து வருகிறது. பல தொழில்நுட்ப சாதனங்கள், தொலைநிலைக் கல்வி மூலமாக படிக்கும் மாணவர்களுக்கு, அசல் வகுப்பறை சூழல் ஏற்படுத்தப்பட்டு, கல்வி கற்பிக்கப்படுகிறது. பல முன்னணி கல்வி நிறுவனங்கள், சிறந்த தொழில்நுட்ப சாதனங்களின் மூலமாக, இத்தகைய சேவைகளை செய்து வருகின்றன. E-Learning முறையானது, இன்றைய நிலையில் பெயர்பெற்ற ஒன்றாக திகழ்கிறது.

இன்ஸ்ட்ரக்ஷன் தொழில்நுட்பம்

Instructional தொழில்நுட்பமானது இன்றைக்கு, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்குரிய ஒரு அம்சமாக மாறியுள்ளது. இதன்மூலம் கற்பித்தல் மற்றும் மதிப்பிடுதலில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய புதிய தொழில்நுட்ப முறைகளால், பணியை விட முடியாமல், அதேசமயம் ஒரு பட்டத்தையும், தனது தொழில் தொடர்பாக ஒரு சிறப்பறிவையும் வேண்டுவோருக்கு, தொலைநிலைக் கல்வி அற்புதமான வடிகாலாக இருக்கிறது. இம்முறை கல்வியில் பல நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், உங்களின் தேர்வை எங்கு எழுதலாம் என்பதுவரை உங்களுக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் கிடைக்கிறது.

முக்கிய நன்மைகள்

பணியையும் தொடர்ந்து கொண்டு, பட்டத்தையும் பெறுவதற்கு இந்த தொலைநிலைக் கல்வி முறை ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. படிப்பின் அம்சங்களை பணியோடு பொருத்திப் பார்ப்பதற்கான ஒரு நல்வாய்ப்பாக இது அமைகிறது. பணியின்போதே படிப்பதால், அதற்கேற்ப உங்களின் நேரத்தை நீங்கள் திட்டமிடுவதால், நேர நிர்வாகத்தை நீங்கள் கற்கிறீர்கள். பணியும்-படிப்பும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால், உங்களின் அனுபவம் கூடி, எதிர்காலத்திற்கு வலு சேர்க்கிறது.

நடைமுறை ரீதியில் தொலைநிலைக் கல்வி பயன்தருமா?

தொலைநிலைக் கல்வியின் மூலம் பெறும் பட்டத்தை, உபயோகம் பொருந்தியதாக உங்களால் நிச்சயமாக மாற்றிக்கொள்ள முடியும். நடைமுறையில் ரீதியில், நேரடியாக பெற்ற பட்டம் அளவிற்கு தொலைநிலைப் பட்டம் கருதப்படாது எனினும், பேரார்வமும், கடின உழைப்பும் இருந்தால், தொலைநிலைக் கல்வியின் மூலமே நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம். உங்களுக்கு யாரும் அணைபோட முடியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us