தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போர் திறன் படிப்புகள்

போர் திறன் படிப்புகள்

போர் திறன் படிப்புகள்


UPDATED : செப் 16, 2011 12:00 AM

ADDED : செப் 16, 2011 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2011 12:00 AM ADDED : செப் 16, 2011 11:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு, நம் ராணுவத்தின் போர்முறைத்திறன் போன்றவற்றை படிப்பது, பாதுகாப்பு மற்றும் போர் திறன் (Defence and Strategic Studies) படிப்பின் சிறப்பு. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இப்படிப்பை பள்ளியிலிருந்தே கற்றுத் தருகின்றன.

ராணுவம் சார்ந்த விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், தேசிய பாதுகாப்பு, அணுசக்திக் கொள்கை, நிலப்பகுதிகளின் அமைப்பு, போர் குறித்து அறிஞர்களின் கருத்து, ஆய்வுகள், ஆட்சியியல், இதழியல் ஆகியவை பாடத் திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.

ராணுவக் கல்வி மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதத்தில் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் இந்த படிப்பை வழங்குகின்றன. எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.,பிரிவில் இதற்கான பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

நிறுவனங்கள்
* சென்னை பல்கலைக்கழகம், சென்னை (www.unom.ac.in)
* குருநானக் கல்லூரி, சென்னை (www.gurunanakcollege.edu.in)
* புனே பல்கலைக்கழகம், புனே (www.unipune.ac.in)
* பஞ்சாபி பல்கலைக்கழகம், பட்டியாலா (punjabiuniversity.ac.in )
* வடக்கு மகாராஷ்டிரா பல்கலைக்கழகம், ஜல்கான் (www.nmu.ac.in)
* ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி (www.jnu.ac.in)
* பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர் (www.puchd.ac.in)
* கோல்கட்டா பல்கலைக்கழகம், கோல்கட்டா (www.caluniv.ac.in)

வேலை வாய்ப்பு
இத்துறையில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் தரைப்படை, விமானப்படை, கப்பல்படை, மற்றும் அரசு துறைகளில் கமிஷன் அலுவலராக பணி அமர்த்தப்படுவர். இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுப்பிரிவில் ஆய்வாளராகலாம்.

யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இந்த படிப்பு இடம் பெற்றுள்ளது. இத்தேர்வின் வாயிலாக அரசுப் பணியில் எளிதில் இடம் பெறலாம். யு.ஜி.சி, மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த படிப்பில் பிஎச்.டி., படிப்பவர்களுக்கு உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்குகிறது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us