UPDATED : செப் 23, 2011 12:00 AM
ADDED : செப் 23, 2011 10:44 AM
அ நிறம் | அளவு
சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் வியாழக்கிழமை துவங்கின. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் காலாண்டு தேர்வை எழுதி வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில்தான் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், செப்டம்பர் 22ம் தேதி காலாண்டு தேர்வுகள் நடக்கின்றன. 4 வார காலத்தில் குறைந்தபட்ச பாடங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதால் அதில் இருந்து மட்டுமே காலாண்டு தேர்வு வினாக்கள் கேட்கப்படும். காலாண்டு தேர்வு முடிந்து அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
