தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிஜிட்டல் பப்ளிஷிங் துறை

டிஜிட்டல் பப்ளிஷிங் துறை

டிஜிட்டல் பப்ளிஷிங் துறை


UPDATED : அக் 04, 2011 12:00 AM

ADDED : அக் 04, 2011 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2011 12:00 AM ADDED : அக் 04, 2011 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குறிப்பிட்ட வகை மக்களுக்கு, புதுமையான முறையில், குறைந்த கட்டணத்தில், ஸ்மார்ட் போன்(Smart Phone), டேப்லெட்(Tablet), ஈ-ரீடர்ஸ்(E-Readers) மற்றும் பிறவகை சாதனங்களின் மூலம் செய்திகளை வழங்க வெளியீட்டாளர்கள்(Publishers) விரும்புகிறார்கள்.

இன்றைய வாசகர்களும், செய்திகள் மற்றும் தகவல்களைப் படிப்பதற்கென்று, தனியாக நேரம் ஒதுக்க விரும்புவதில்லை. தாங்கள் எங்கே இருக்கிறோமோ, எப்போது விரும்புகிறோமோ, அங்கேயே, அந்த நேரத்திலேயே செய்திகள் மற்றும் தகவல்களை தங்களுக்கு வசதியான சாதனங்களின்(Handful Devices) மூலம் பெற விரும்புகின்றனர். வாசகர்களுக்கு, உடனடியாகவும், சிறப்பாகவும் செய்திகளைத் தர முடியும் என்பதால், டிஜிட்டல் வெளியீட்டு தொழில்நுட்பமானது(Digital Publishing Technology), வெளியீட்டாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.

இந்தியாவிற்கான வாய்ப்புகள்

ஒரு வளர்ந்துவரும் டிஜிட்டல் வெளியீட்டு தொழில்மையம் என்ற முறையில், அவுட்சோர்சிங் முறையால், இந்தியா வணிகரீதியில் பயன்பெற்று வருகிறது. சர்வதேச அளவில் முக்கிய வெளியீட்டாளர்களின் புத்தகங்கள், சஞ்சிகைகள்(Journals), செய்தித்தாள்கள், பத்திரிகைகள், எலக்ட்ரானிக் புத்தகங்கள்(e-books), எலக்ட்ரானிக் பேப்பர்கள்(e-papers), டைரக்டரிகள்(directories), எலக்ட்ரானிக் லேர்னிங்(e-learning) உள்ளடக்கம், வெப் உள்ளடக்கம்(web content), அனிமேஷன் உள்ளடக்கம் ஆகியவை மூலமாகவும், ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸ், பிரென்டிஸ் ஹால்(Prentice Hall), மெக்மில்லன்(Macmillan), எல்சிவியர்(Elsevier), ஸ்பிரங்கர்(Springer), வொய்லே(Wiley), பியர்சன்(Pearson) போன்ற நிறுவனங்கள், இந்தியாவிற்கு அதிகளவில் சேவைகளை அவுட்சோர்சிங் செய்கின்றன.

இந்தியாவில் வெளியிடப்படும் இலக்கியங்களில் 45% ஆங்கில மொழியினுடையது. அந்த வகையில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கடுத்து, ஆங்கிலப் புத்தக வெளியீட்டில் இந்தியா 3ம் இடத்தைப் பெறுகிறது. இந்த வகையில், டிஜிட்டல் பப்ளிஷிங்(Digital Publishing) துறையில் அதிகளவு வேலை வாய்ப்புகள் உள்ளன.

டிஜிட்டல் பப்ளிஷிங் துறையில் படிப்பு

எனவே, இன்றைய தேவையை உணர்ந்து, டிஜிட்டல் பப்ளிஷிங் தொழில்துறையினர் மிக ஆவலாக எதிர்நோக்கிய, இத்துறைக்கான B.Sc படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், டிஜிஸ்கேப் கேலரியும்(Digiscape Gallery) இணைந்து வழங்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

இந்த தொழிலில் தேவைப்படும் மனிதவளத்தை, தொழிலுக்கு தேவையான அறிவுடன் வழங்குவதே இந்தப் படிப்பு தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கம். இப்படிப்பின் பாடத்திட்டமானது, இத்தொழிலுக்குத் தேவைப்படும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்தப் பாடத்திட்டமானது, தேவையான அளவில் தியரி மற்றும் பிராக்டிகல் அம்சங்களை மட்டும் உள்ளடக்கியிருக்கவில்லை. மாறாக, அனைத்து டிஜிட்டல் பப்ளிஷிங் புலங்களின்(domains) அம்சங்களையும் கொண்டுள்ளது.

இன்றைய நிலையில், டிஜிட்டல் பப்ளிஷிங் துறையைப் பொறுத்தமட்டில், பத்திரிகை வெளியிடுதல், செய்தித்தாள் வெளியிடுதல், புத்தகம் வெளியிடுதல் மற்றும் சிறிய கையேடு வெளியிடுதல் போன்ற அம்சங்கள் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டியவையாக உள்ளன. அவை, வெறும் அச்சிடப்பட்ட அம்சங்களாக மட்டுமே தெரிவதில்லை. மாறாக, எந்த இடத்திலும், எந்த முறையிலும்(கையடக்க சாதனங்களின் மூலம் பார்க்கக்கூடிய, இணையத்தில் தேடக்கூடிய) அனுபவிக்கத்தக்க தனித்துவம் உடையதாக இருக்கின்றன.

இந்த டிஜிட்டல் பப்ளிஷிங் துறையுடன் இணைந்த இன்னொரு துறை எலக்ட்ரானிக் லேர்னிங்(e-learning). ஏனெனில், இன்றைய நிலையில், அதிகளவிலான தனிநபர்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர அமைப்புகள் போன்றவை மாதிரி முறையிலான வகுப்பறை அமைப்பை(Virtual Class room) நோக்கி செல்வதால் இந்தத் துறை பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது.

3 வருட காலஅளவைக் கொண்ட இந்தப் படிப்பானது, அண்ணாமலைப் பல்கலையின் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தால் வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பின் குறியீட்டு எண் 525. இப்படிப்பிற்கு, தொலைதூரக் கல்வி கவுன்சிலின்(DEC) அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பின் சிறப்புகள்

* இதற்கானப் பாடத்திட்டத்தை CII(Confederation of Indian Industry) பரிந்துரைத்துள்ளது.

* பப்ளிஷிங் தொழிலின் விவரணங்களோடு இணைந்த வகையில் இதன் பயிற்சி முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

* அடோப்(Adobe) சான்றளிக்கப்பட்ட நிபுணர்களால், பாட உள்ளடக்கம்(content) மேம்படுத்தப்பட்டுள்ளது.

* மாதிரி வகுப்பறை(Virtual class room) கற்பித்தல் செயல்பாட்டில், தொழில்துறை நிபுணர்கள் பங்கேற்கிறார்கள்.

* CII-பப்ளிஷிங் தொழில்துறை உறுப்பினர்கள் வேலைவாய்ப்பிற்கு உதவுகிறார்கள்.

முதல்வருடப் படிப்பு

முதல் வருடத்தில் மட்டும் மொழிப்பாடங்கள் உண்டு.

முக்கியப் பாடங்களாக,

* பிரிண்ட் மீடியா பப்ளிஷிங் டிசைன்

* இமேஜ் எடிட்டிங் மற்றும் கலர் கரெக்ஷன்(correction)

* வெக்டர்(vector) டிராயிங்ஸ் கிரியேஷன்

* டிஜிட்டல் ஆர்ட் ஒர்க் கிரியேஷன்

* Lab I - இமேஜ் எடிட்டிங் மற்றும் ஆர்ட் ஒர்க்

* Lab II - பிரிண்ட் மீடியா டிசைன்

போன்ற பலவிதமான தலைப்புகளில் பாடத்திட்டங்கள் உள்ளன.

இரண்டாம் வருட படிப்பு

* எலக்ட்ரானிக் பப்ளிஷிங்(E-Publishing) கருத்தாக்கங்கள்(concepts) மற்றும் கிராபிக் எடிட்டிங்

* எஜுகேஷனல் பப்ளிஷிங் டிசைன்

* STM பப்ளிஷிங் டிசைன்

* டெக்னிக்கல் எடிட்டிங் மற்றும் குவாலிட்டி கன்ட்ரோல்

* காப்பி(copy) எடிட்டிங் மற்றும் மொழி(language) எடிட்டிங்

* XML பப்ளிஷிங் மற்றும் டேட்டா கன்வெர்ஷன்

* Lab  III - கிராபிக் எடிட்டிங்

* Lab IV - எலக்ட்ரானிக் பப்ளிஷிங் டிசைன்

போன்ற தலைப்புகளில் பாடத்திட்டங்கள் உள்ளன.

மூன்றாம் வருட படிப்பு

* வெப் டிசைன் கருத்தாக்கங்கள்(concepts) மற்றும் HTML பப்ளிஷிங்

* வெப் அனிமேஷன் மற்றும் டிசைன்

* வெப்சைட் டிசைன் மற்றும் கிரியேஷன்

* எலக்ட்ரானிக் லேர்னிங்(E-Learning) டிசைன் மற்றும் சவுண்டு எடிட்டிங்

* அட்வான்ஸ்டு ஆக்ஷன்(action) ஸ்கிரிப்டிங்

* Lab V - வெப்சைட் டிசைன் கிரியேஷன்

* Lab VI - வெப் ஸ்கிரிப்டிங் மற்றும் அப்ளிகேஷன்ஸ்

* ப்ராஜெக்ட் மற்றும் வைவா(VIVA) வாய்ஸ்

ஆகிய தலைப்புகளில் பாடத்திட்டங்கள் உள்ளன.

இப்படிப்பிற்கான கட்டணம்

படிப்புக் கட்டணம், பல்கலைக்கழக கட்டணம் மற்றும் இதரவகை உதிரி செலவினங்கள் என்று சேர்த்து, 3 வருடங்களுக்கு மொத்தமாக ரூ.70,000 வரை செலவாகிறது. இவற்றை நிர்ணயிக்கப்பட்ட தவணை முறையில் கட்டலாம்.

காலம் கடந்து கட்டணம் செலுத்தினால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

* இப்படிப்பின் கற்பித்தல் மொழி(Medium of Instruction) ஆங்கிலம்.

இப்படிப்பிற்கான தகுதி

மேல்நிலைப் பள்ளிப் படிப்பு அல்லது அதற்கு சமமானப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், 3 வருட தொழில்நுட்ப டிப்ளமோ தேர்வை முடித்தவர்களும், இப்படிப்பில் சேர தகுதியுடையவர்கள்.

விண்ணப்பம்

இப்படிப்பிற்கான விண்ணப்பத்தை, அண்ணாமலைப் பல்கலையின் தொலைநிலைக் கல்வி இயக்குநரகம் அல்லது அதன் ஏதேனும் ஒரு கற்றல் மையம்(Study centre) அல்லது DPUB கற்றல் மையம் ஆகிய ஏதேனும் ஒன்றில் ரூ.250 கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்.

ஒருமுறை வாங்கிய விண்ணப்பத்தை மீண்டும் திரும்பக் கொடுத்து, பணத்தைப் பெற முடியாது மற்றும் மாற்ற முடியாது. மேற்கூறிய மையங்களில் வாங்கிய விண்ணப்ப படிவங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விண்ணப்பத்தை கவனமாகப் பூர்த்தி செய்வதுடன், கேட்டுள்ள ஆவணங்களையும் தவறாமல் இணைக்க வேண்டும்.

இப்படிப்பை பற்றிய முழு விபரங்களை அறிந்துகொள்ள,

திட்ட ஒருங்கிணைப்பாளர்
டிஜிஸ்கேப் கேலரி
எண்-2, வீட்கிராப்ட்ஸ் சாலை
நுங்கம்பாக்கம்,
சென்னை - 600 034

தொலைபேசி - 044 28236068.

இணையதளம் - www.dpub.in

இதைத்தவிர, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்குநரையும் அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us