தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை மாணவியர் போராட்டம்

பல்கலை மாணவியர் போராட்டம்

பல்கலை மாணவியர் போராட்டம்


UPDATED : அக் 22, 2011 12:00 AM

ADDED : அக் 22, 2011 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2011 12:00 AM ADDED : அக் 22, 2011 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை காமராஜ் பல்கலை முதுகலை மாணவியர் விடுதியில் உணவு தரமாக இல்லை; சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுவதில்லை; விடுதியில் 322 பேர் உள்ளதால், விடுதியை இரண்டாக பிரிக்க வேண்டும்; ஆய்வக வசதி செய்ய வேண்டும் எனக்கூறி மாணவியர் நேற்று காலை 10.30 மணிக்கு பல்கலை வளாக காமராஜர் சிலை அருகே முற்றுகையிட்டனர்.

பி.ஆர்.ஓ.,சுவாமிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். நவ.,4 க்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். பகல் 12 மணிக்கு கலைந்து சென்றனர். பதிவாளர் (பொறுப்பு) ராஜியக்கொடி, "ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமைகளில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்துகிறோம். அதில், மாணவர்கள் விடுதி பிரச்னையை தெரிவிக்கவில்லை. புகார் தெரிவித்திருந்தால், நடவடிக்கை எடுத்திருப்போம்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us