தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவின் கணிதமேதைக்கு உதவுங்கள்

இந்தியாவின் கணிதமேதைக்கு உதவுங்கள்

இந்தியாவின் கணிதமேதைக்கு உதவுங்கள்


UPDATED : நவ 09, 2011 12:00 AM

ADDED : நவ 09, 2011 02:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2011 12:00 AM ADDED : நவ 09, 2011 02:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அபாக்கஸ் கணக்கில், சர்வதேச அளவில் சாதனை புரிந்து வரும் மாணவன் ஹரிஷ்ராஜுக்கு, போதுமான நிதி உதவி இல்லாததால், ஜப்பானில், டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளார்.

எட்டு வயதே நிரம்பிய சுட்டிப் பையன் ஹரிஷ்ராஜ், சென்னை, தாம்பரத்தில் உள்ள சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கிறார். பிறந்தது முதலே படிப்பில் சுட்டி. பள்ளியில், பல போட்டிகளில் கலந்து, நிறைய பரிசுகளும், சான்றிதழ்களும் வாங்குவது இவர் வழக்கம். படிப்பில் மட்டுமல்லாமல் கராத்தே, சிலம்பம், யோகா உள்ளிட்ட போட்டிகளில், தேசிய அளவில் சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.

ஐந்தே நிமிடத்தில், 100 கணக்குகளை ஒப்புவித்து, பரிசைத் தட்டிச் சென்ற போது தான், ஹரிஷûக்கு, கணக்கெல்லாம், "தண்ணி பட்ட பாடு&' என்பது புரிந்தது. எனவே, அபாக்கஸ் வகுப்பில் சேருமாறு, பள்ளியின் முதல்வர் விஜயன் வலியுறுத்தினார். அங்கு, அவருடைய ஆசிரியைகளே மலைத்துப் போகும் அளவு, மளமளவென கணக்குகளைப் போட்டார். எனவே அவர்கள், சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உற்சாகமூட்டினர். அனைத்து போட்டிகளிலும் வென்று, பரிசுகள், சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.

கடந்த 2010ல் நடந்த சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு, "ஏ&' பிரிவில் வெற்றி பெற்றார். இந்தாண்டு டிசம்பர் மாதம், ஜப்பானில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருடைய தந்தை நடராஜ், டாக்சி டிரைவர்; தாய் கிருத்திகா; வேலைக்குச் செல்லாதவர். 1.5 லட்ச ரூபாய் செலவாகும் என்பதால், தம் குழந்தையை ஜப்பானுக்கு அனுப்ப, இவர்களால் இயலவில்லை.

தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க உள்ள ஹரிஷ்ராஜுக்கு உதவ முன்வருவோர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:

நடராஜ் - 98406 30905.
ஹரிஷ்ராஜின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த முன்வருவோர், கீழே உள்ள வங்கிக் கணக்கு எண்ணில் சேர்க்கலாம்:
பெயர்: என்.கே.ஹரிஷ்ராஜ், வங்கி பெயர்: கரூர் வைஸ்யா வங்கி, வங்கிக் கணக்கு எண்: 1617155000025032.
வெளிநாட்டிலிருந்து பணம் செலுத்துவோர், வங்கியின், IFSC Code: KVBL0001617என்ற எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
வலைத்தளம்: abacustopper.blogspot.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us