UPDATED : நவ 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
எகிறும் மக்கள் தொகைப் பிரச்னையைத் தாண்டி, தனது தனித்தன்மை வாய்ந்த பொருளாதார முறைகளாலும், மக்களின் கடின உழைப்பாலும் உலகெங்கும் அறியப்படும் நாடு சீனா.
சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் இங்கு நடைபெற்றபோது ஆங்கில அறிவு பெற இம்மக்கள் ஆர்வம் காட்டினர். காலத்துக்கேற்ற புதுப்புது முயற்சிகளை தவறாது செய்யும் சீனா தற்போது சட்டப்படிப்புகளில் புதுமையைக் கொண்டு வருகிறது.
ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சீனா நடத்தும் முதல் சட்டப்பள்ளி சீனாவின் பீஜிங் நகரில் துவங்கப்பட்டு உள்ளது. ‘சீனா ஐரோப்பியன் யூனியன் ஸ்கூல் ஆப் லா (ECL) என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இக்கல்வி நிறுவனம் சீனாவின் சட்ட நிபுணர்களுக்கு சீனா மற்றும் சர்வதேச சட்டங்களில் பயிற்சியளிக்க உள்ளது. சீன அரசுக்கும், ஐரோப்பிய கூட்டமைப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய பகுதியாக இந்தக் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கல்வி நிறுவனம் சீனா மற்றும் ஐரோப்பிய சட்டங்கள் பற்றிய பரஸ்பர புரிந்துகொள்ளும் தன்மையை அதிகப்படுத்துவதுடன். சீன ஐரோப்பிய ஒத்துழைப்பின் முக்கிய அங்கமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இக்கல்வி நிறுவனம் ‘சீனா யுனிவர்சிடி ஆப் பொலிடிக்கல் சியின்ஸ் அன்டு லா’வின் ஒரு அங்கமாகத் திகமும்.
16 சீனா மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்தவுள்ள இக்கல்வி நிறுவனம், இங்கு பயிலும் மாணவர்களை சர்வதேச சட்டதிட்டங்களில் முழுமையாகப் பயிற்றுவிக்க உள்ளது.
