UPDATED : டிச 12, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்றுள்ளவர்களில் 27 எம்.எல்.ஏ.,க்கள் பட்டப் படிப்பு கூட படிக்காதவர்கள் என தெரியவந்துள்ளது.
டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.,க் களின் கல்வி தகுதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், ‘தற்போது வெற்றி பெற்றுள்ளவர்களில் 27 எம்.எல்.ஏ.,க்கள் குறைந்த பட்சம் பட்டப் படிப்பு கூட படிக்காதவர்கள். 33 பேர் பட்டப் படிப்பு படித்தவர்கள். இந்த 33 பேரில், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் 14 பேர். காங்கிரசை சேர்ந்தவர்கள் 19 பேர். புதிய எம்.எல்.ஏ.,க்களில் ஹசன் அகமது, சத்யா பிரகாஷ் ராணா ஆகியோரின் கல்வி தகுதிகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
