UPDATED : அக் 31, 2014 12:00 AM
ADDED : அக் 31, 2014 10:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் எஸ்.ஐ.சி., சார்பில் சமுதாய பாதுகாப்பு திட்ட உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வித்தொகை வழங்கும் விழா நடந்தது.
மதுரை கோட்ட முதுநிலை மேலாளர் கோவிந்தராஜூ தலைமை வகித்தார். காப்பீடு திட்ட மேலாளர் சங்கர் வரவேற்றார். இத்திட்டத்தின் கீழ் 17 ஆயிரத்து 62 மாணவர்களுக்கு ரூ.1.07 கோடி கல்வி உதவித்தொகையை கலெக்டர் நந்தக்குமார் வழங்கினார். கோட்ட வணிக மேலாளர் செந்தூர்நாதன், கிளை மேலாளர் ஜீவதயாளராஜன் பேசினர். நிர்வாக அதிகாரி பாலமுரளி நன்றி கூறினார்.

