UPDATED : ஜன 09, 2015 12:00 AM
ADDED : ஜன 09, 2015 10:36 AM
அ நிறம் | அளவு
மயிலம்: மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
மயிலம் பொம்மபுர ஆதினப் புலவர் சிவலிங்கனார் நினைவு நாள், நூல் வெளியீடு, கல்லூரி பழைய மாணவர்கள் சந்திப்பு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் விஜயகாந்தி, தமிழ்த் துறைத் தலைவர் திருநாவுக்கரசு, மயிலம் ஊராட்சி தலைவர் ஸ்ரீதர், முன்னாள் கல்லூரி முதல்வர்கள் திருநாவுக்கரசு, சற்குணம், மேலசிவபுரி தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் முத்தப்பன், முன்னாள் மாணவர்கள் அரிமதிதென்னகன், பச்சையப்பன், கவிஞர் நாகி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
