தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால்...

விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால்...

விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால்...


UPDATED : பிப் 01, 2015 12:00 AM

ADDED : பிப் 01, 2015 11:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2015 12:00 AM ADDED : பிப் 01, 2015 11:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு ஊரில் ஐந்து நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் இணைந்து விவசாயம் செய்ய முடிவு செய்தனர். கொஞ்சம் முதலீடு செய்து அந்த கிராமத்தில் இருந்த ஒரு நிலத்தை வாங்கினர். அதில் விவசாயம் செய்யும் வேலையில் இறங்கினர்.

நண்பர்களே, இந்த இடத்தில் தண்ணீர் சுத்தமாக இல்லை. நாம் விவசாயம் செய்ய வேண்டும் என்றால் ஒரு கிணற்றை அவசியம் வெட்டியாக வேண்டும் - ஒரு நண்பன் இப்படிச் சொன்னதும், மற்ற நண்பர்களும், சரி என்றனர். ஒரு நல்ல நாளில் கிணறு வெட்டத் தொடங்கினர். நான்கு அடிகள் வரை தோண்டி விட்டனர்.

அவர்களில் ஒரு நண்பனுக்கு நம்பிக்கை போய்விட்டது. இந்த இடத்தில் எத்தனை ஆழம் வெட்டினாலும் தண்ணீர் கிடைக்காது என்று அவன் மனதில் தோன்றியது. நண்பர்களே, இந்த இடத்தில் நிச்சயம் தண்ணீர் கிடைக்காது. நான் இதிலிருந்து விலகிக்கொள்ள விரும்புகிறேன். மற்ற நான்கு நண்பர்கள் அவனுக்கு நம்பிக்கை ஊட்டினர்; அவன் கேட்கவில்லை.

அவனுக்குச் சேர வேண்டிய தொகையை கொடுத்தனர். மற்ற 4 பேரும் வேலையை தொடர்ந்தனர். நாட்கள் கழிந்தன; தண்ணீர் வந்த பாடில்லை. நான்கு நண்பர்களில் ஒருவன் மனம் தளர்ந்தான். இந்த இடத்தில் நிச்சயம் தண்ணீர் கிடைக்காது, என கூறி அவன் தொகையை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டான். 3வது நண்பனும் நம்பிக்கை இழந்து பிரிந்து சென்றான். இப்போது நிலம் கடைசியாக இருந்த இருவருக்குச் சொந்தமானது.

அந்த 2 பேரிலும், ஒருவனுக்கு நம்பிக்கை போனது. அவன் மற்றொருவனிடம் தெரிவிக்க அவனோ, மனம் தளராதே. நிச்சயம் தண்ணீர் கிடைக்கும். விடாமுயற்சியோடு நாம் உழைப்போம், என்றான். அந்த நண்பன் அதைக் கேட்கவில்லை. அவனும் சென்று விட்டான்.

இப்போது கடைசியாக நம்பிக்கையுடன் இருந்தவனுக்கு நிலம் சொந்தமானது. அவன் மற்ற 4 பேரை போல மனம் தளராமல் விடாமுயற்சியோடு வேலையை தொடர்ந்தான்.

கிணற்றில் இருந்து தண்ணீர் ஊற்று பெருகியது. மன உறுதியோடும், விடாமுயற்சியோடும் கடைசி வரை போராடியதால் அவனது வெற்றி சாத்தியமானது. பின், ஆட்களை வைத்து அந்த நிலத்தை சீர்செய்து பலவிதமான பயிர்களை விளைவித்தான். செல்வச் செழிப்போடு நிம்மதியாக வாழ்ந்தான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us