தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலையில் சிண்டிகேட்

சென்னை பல்கலையில் சிண்டிகேட்

சென்னை பல்கலையில் சிண்டிகேட்


UPDATED : செப் 11, 2015 12:00 AM

ADDED : செப் 11, 2015 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2015 12:00 AM ADDED : செப் 11, 2015 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்களின் போராட்டம், மாணவர்கள் மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க, சென்னை பல்கலையில், இன்று சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படுகிறது.

சென்னை பல்கலையில், அரசியல் அறிவியல் துறையின் பொறுப்பு தலைவர் பேராசிரியர் மணிவண்ணனுக்கு பதில், பேராசிரியர் கோடீஸ்வர பிரசாத், துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அதை எதிர்த்து, மாணவர்களில் ஒரு தரப்பினர் தொடர் போராட்டம் நடத்தினர். அவர்களில், 10 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, மாணவர்கள் பலர், பல்கலை நிர்வாகத்திடம் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விசாரணை, வீடியோ காட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை பல்கலையில், ஊடகவியல் துறையில் விடுமுறை நாளில், மாணவ, மாணவியர் பங்கேற்ற கலாசார நிகழ்ச்சி தொடர்ச்சியாக, மாணவர்கள் இருதரப்பாக மோதிக் கொண்டனர். அதில் ஒரு மாணவர் காயம் அடைந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விவகாரங்கள் தொடர்பாகவும், பல்கலையில் அடுத்தகட்ட மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆலோசிக்க, சிண்டிகேட் கூட்டம் இன்று பிற்பகலில் நடக்கிறது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்க, நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us