தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் தற்கொலை முயற்சி!

மாணவர்கள் தற்கொலை முயற்சி!

மாணவர்கள் தற்கொலை முயற்சி!


UPDATED : அக் 06, 2015 12:00 AM

ADDED : அக் 06, 2015 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2015 12:00 AM ADDED : அக் 06, 2015 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்
: தனியார் மருத்துவக் கல்லூரி மீது நடவடிக்கை கோரி, விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், முன்னாள் மாணவ, மாணவியர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் அடுத்த பங்காரம் கிராமத்தில், தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இதில், 2008 - 12ம் ஆண்டுகளில் படித்த மாணவர்கள், 75 பேர், படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டனர். கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், கல்விக் கட்டணத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அம்மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், படிப்பை பாதியில் விட்ட மாணவர்களில், ஆறு மாணவியரும், மூன்று மாணவர்களும், நேற்று காலை, 11:00 மணிக்கு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். பின், திடீரென பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு வந்த, சப்கலெக்டர் ஜெயசீலனிடம், கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அங்கு தொடர்ந்து படிக்க முடியவில்லை. எங்களின் படிப்பு கேள்விக்குறியாகி விட்டது. கல்லூரி மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்விக் கட்டணத்தை திருப்பித்தர வேண்டும். இல்லாவிட்டால், வாக்காளர், ஆதார் அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கிறோம் என தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜெயசீலன் தெரிவித்தார். பின், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டனர்.

போலீசார் அலட்சியம்!

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே, ஒன்பது மாணவர்கள் பூச்சி மருந்து குடித்து மயங்கினர். அங்கிருந்த போலீசார் கண்ணெதிரில் இச்சம்பவம் நடந்தும், மாணவர்களை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சப்கலெக்டர் வந்தபின் சுறுசுறுப்படைந்து, ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, மாணவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us