UPDATED : அக் 20, 2015 12:00 AM
ADDED : அக் 20, 2015 10:19 AM
கிருஷ்ணகிரி
:
கிருஷ்ணகிரியில், வரும், 31ம் தேதி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
நடக்கிறது. இது குறித்து கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வரும், 31ம் தேதி, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில், 5ம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் கலந்துகொண்டு, தங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை தேர்வு செய்யலாம். இந்த முகாமில், வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய அனைத்து தொழில் நிறுவனங்களும் கலந்துகொண்டு, தங்களது நிறுவனங்களுக்கு தகுதியான ஆண்கள் மற்றும் பெண்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை, வரும், 27ம் தேதிக்குள், திட்ட இயக்குனர், மகளிர் திட்ட செயலாக்க பிரிவு, எண்.106, கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 04343-235267, 9445034147 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.
வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர், இந்த முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம். மேலும், முகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம், வேலைவாய்ப்பு பதிவு மற்றும் ஊக்கத்தொகை பெறுவதற்கான பதிவு செய்து தரப்படும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
