UPDATED : அக் 29, 2015 12:00 AM
ADDED : அக் 29, 2015 10:05 AM
அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள, கிண்டி இன்ஜி., கல்லுாரி சார்பில், 2007 முதல், குருஷேத்ரா என்ற பெயரில், தொழில்நுட்ப மேலாண்மை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 10ம் ஆண்டுக்கான குருஷேத்ரா விழா, ஜன., 27ல் துவங்குகிறது; 30ம் தேதி வரை நடக்கிறது.
மூளைகளின் போர் என்ற கருத்துடன் நடக்கும் இந்த விழாவில், இந்த ஆண்டு, 80 நாடுகளைச் சேர்ந்த, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இன்ஜி., மாணவர்களும், பிரசித்தி பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான, வினாடி - வினா போட்டி, அண்ணா பல்கலை இன்ஜி., மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி, ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விழா விவரங்களை, http://www.kurukshetra.org.in/#/gl என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
