தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலாம் அறிவுசார் மையம்

கலாம் அறிவுசார் மையம்

கலாம் அறிவுசார் மையம்


UPDATED : டிச 11, 2015 12:00 AM

ADDED : டிச 11, 2015 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2015 12:00 AM ADDED : டிச 11, 2015 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்
:
 டில்லியில் அப்துல்கலாம் பெயரில் அறிவுசார் மையம்&' அமைக்க முதல்வர் கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார், என அம்மாநில கலாசாரத்துறை தலைமை மேலாளர் மனோஜ்குமார் தெரிவித்தார்.

அதில் கலாமின் உடைமைகள் இடம்பெறவேண்டும் என்பதற்காக, டில்லி மாநில சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை தலைமை மேலாளர் மனோஜ்குமார், துணை செயலாளர் பல்வன்சிங் வசிஷ்ட், கலை நிபுணர் சஞ்சய் கார்க் ஆகியோர் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். கலாம் பயன்படுத்திய 2,௦௦௦ புத்தகங்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய வீடியோ சிடி, வீணை உள்ளிட்ட சில பொருட்களை கலாமின் அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர், பேரன் சலீம் ஆகியோர் டில்லி அதிகாரிகளிடம் வழங்கினர். தாய்த்தமிழ் அறக்கட்டளை தலைவர் பழனிச்சாமி உடனிருந்தார். 

மேலாளர் மனோஜ்குமார் கூறியதாவது: 

டில்லியில் கலாம் பெயரில் அறிவுசார் மையம் அமைக்க முதல்வர் கெஜ்ரிவால் உறுதியாக உள்ளார். கலாமின் உடைமைகளை முதல்வரிடம் ஒப்படைத்து, டில்லியில் முக்கியமான இடத்தில் அறிவுசார் மையம் விரைவில் அமைக்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us