UPDATED : டிச 13, 2015 12:00 AM
ADDED : டிச 13, 2015 08:50 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி இயக்ககம் சார்பில், டிச., 19 முதல் நடக்கயிருந்த பி.எல்.ஐ.எஸ்.சி., எம்.எல்.ஐ.எஸ்.சி., மற்றும் பி.ஜி.எல்., தேர்வுகள், ஜன., 6 முதல் நடக்கிறது.
சென்னை, புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. முதுநிலை சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டயம், பி.எட்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., அடிப்படை, தொடக்கநிலை படிப்புக்கான தேர்வு தேதிகளில் மாற்றமில்லை, என கூடுதல் தேர்வாணையர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
