தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் மரக்கன்று நடுதல்

பள்ளிகளில் மரக்கன்று நடுதல்

பள்ளிகளில் மரக்கன்று நடுதல்


UPDATED : மார் 28, 2016 12:00 AM

ADDED : மார் 28, 2016 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2016 12:00 AM ADDED : மார் 28, 2016 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹெல்ப் டிரஸ்ட் தொண்டு நிறுவனர் ஆதிகேசவன்: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன், 40 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் பைகள் விற்கவும், பயன்படுத்தவும் தடை உள்ளது. 

ஆனால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இன்றி பாலிதீன் பைகளை பயன்படுத்தி மண்ணில் வீசுகிறோம். இவைகள் மண்ணில் மக்கிபோகாமல் நிலத்தில் தங்குவதால் மழைநீர் பூமிக்குள் இறக்குவது தடுக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் குறைகிறது. விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுகிறது. 

இது பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வடபுதுப்பட்டியில் இந்து உயர்நிலை பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு மாணவர்கள் மூலம் பராமரிக்கின்றோம். இதுவரை 500 மரக்கன்றுகளை நட்டு, அதில் 50 சதவீத மரங்களாக வளர்ந்துள்ளது.

ஒரு மரம் இழந்தால் ரூ.33 லட்சம் இழப்பு 50 ஆண்டுகள் உயிர்வாழும் ஒருமரம் 5.3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிராண வாயுவை உற்பத்தி செய்கிறது. ரூ.6.5லட்சம் மதிப்பில் மண் வளத்தை பெறுக்குகிறது. ரூ.6.5 லட்சம் மதிப்பிற்கு செலவாகும் மண் அரிப்பை தடுக்கிறது. ரூ.10.5 லட்சம் மதிப்பிலான காற்று மாசுபடுவதை தடுக்கிறது. 

ரூ.5.3 லட்சம் மதிப்பிற்கு விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் சரணாலயமாக விளங்கும். எனவே, ஒரு மரம் விழுந்தாலோ மரம் வெட்டப்பட்டாலோ அருகில் உள்ள ஊருக்கு ரூ.33 லட்சம் மதிப்பிற்கு இழப்பு ஏற்படுவதாக வன ஆர்வலர்கள் கணக்கெடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us