UPDATED : மே 12, 2016 12:00 AM
ADDED : மே 12, 2016 11:09 AM
அ நிறம் | அளவு
சென்னை
: தண்டையார்பேட்டை
மணிக்கூண்டு அருகே, ரத்தின சபாபதி தெருவில், ஆதிதிராவிட மாணவர் இல்லம் செயல்படுகிறது.
அங்கு, 4ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்க, ஆதிதிராவிட, பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதரவற்ற மாணவர்கள், ஜூன் 1 முதல் இலவசமாக சேர்த்து கொள்ளப்படுவர். இதற்கான சேர்க்கை படிவம், மே 15 முதல், வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள மாணவர்கள், தாசில்தாரிடம் பெறப்பட்ட, அசல் ஜாதி, வருமானம், இறுதியாக பயின்ற கல்வி சான்றுகளுடன் வர வேண்டும். மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி மையம், இவ்வாண்டு முதல் துவக்கப்படுகிறது.
