தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கலைக்கல்லூரி கொண்டுவரப்படும்

அரசு கலைக்கல்லூரி கொண்டுவரப்படும்

அரசு கலைக்கல்லூரி கொண்டுவரப்படும்


UPDATED : மே 12, 2016 12:00 AM

ADDED : மே 12, 2016 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 12, 2016 12:00 AM ADDED : மே 12, 2016 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி
:
மாணவர்களின் வசதிக்காக அரசு கலைக்கல்லுாரி கொண்டு வரப்படும், என பொள்ளாச்சி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதியளித்தார்.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட முதல்வார்டு வடுகபாளையம் பகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது,
வேட்பாளர் பேசியதாவது:
பொள்ளாச்சி தொகுதியை வளர்ச்சியான பகுதியாக மாற்ற உரிய வகையில் பாடுபடுவேன். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வழி வகை செய்யப்படும். நெரிசலை குறைக்க போதுமான திட்டங்கள் செயல்படுத்தப்படும். அரசு கலைக்கல்லுாரி
, ஐ.டி.ஐ., அமைக்கப்படும்.

பி.ஏ.பி., பாசனத்தில், வாய்க்கால் முறை மாற்றப்பட்டு, சொட்டு நீர் பாசன முறை அமல்படுத்தப்படும். பொள்ளாச்சி மருத்துவமனைக்கு போதுமான வசதிகள் மேம்படுத்தி தரப்படும்.

பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகளை ஏற்று, அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வரபாடுபடுவேன். இவ்வாறு, வேட்பாளர் பேசினார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகர், கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, திருநீலகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us