தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுற்றுச்சூழல் கல்வி அவசியம்

சுற்றுச்சூழல் கல்வி அவசியம்

சுற்றுச்சூழல் கல்வி அவசியம்


UPDATED : ஜூன் 07, 2016 12:00 AM

ADDED : ஜூன் 07, 2016 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2016 12:00 AM ADDED : ஜூன் 07, 2016 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி
: மனிதர்கள் வாழத்தகுதியான இடமாக
, நாட்டை மாற்றுவதற்கான சுற்றுச்சூழலியல் விஷயங்களில், கவனம் செலுத்த வேண்டும் என, சுற்றுச்சூழல் தின விழாவில் தெரிவிக்கப்பட்டது.

நல்லது நண்பர்கள் அறக்கட்டளை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினம், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது; தலைமையாசிரியர் தேவராஜ் தலைமை வகித்தார்.

சுற்றுச்சூழல் மற்றும் விலங்கியல் ஆர்வலர், கோவை சதாசிவம் பேசியதாவது:

நம்மிடையே பெரிய சவாலாக, பிளாஸ்டிக் மற்றும் மின்னணு கழிவுகள் உள்ளன. அவற்றை, பாதிப்பின்றி எவ்வாறு அகற்றுவது என்ற கேள்விக்கு, இதுவரை விடையில்லை. ஏராளமான சீர்கேடுகளால், சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதால், இந்தாண்டு வெப்பம், 40 டிகிரிக்கு மேல் பதிவானது; இதே நிலை நீடிப்பது, ஆபத்தில் முடியும்.

நம் நாட்டில், இதுவரை சேகரமாகியுள்ள, 18 லட்சம் மின்னணு கழிவுகளையும், இதர பிளாஸ்டிக் கழிவுகளையும், எவ்வாறு பாதுகாப்பாக அகற்றப் போகிறோம்? எனவே, மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, பள்ளிப்பருவத்தில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். 

மரம் வளர்க்க வேண்டும்; சுற்றுச்சூழலை பாதுகாப்புக்கு உகந்ததாக மாற்ற வேண்டும். அப்போது மட்டுமே, மனிதர்கள் வாழத்தகுந்ததாக, நமது நாடு மாற முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us