UPDATED : ஜூன் 07, 2016 12:00 AM
ADDED : ஜூன் 07, 2016 11:00 AM
திருப்பூர்
:
திருப்பூர் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு
ஊர்வலம், பாரப்பாளையம் பள்ளியில் நேற்று
நடத்தப்பட்டது.
திருப்பூர்
மாநகராட்சி பள்ளியில் சேரும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், மங்கலம் ரோடு, பாரப்பாளையம் மாநகராட்சி
நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், நேற்று விழிப்புணர்வு ஊர்வலம்
நடத்தினர். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோவிந்தராஜ், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் அருணா தலைமை வகித்தார்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான, 120 மாணவர்கள்
பங்கேற்றனர்.
பள்ளி வளாகத்தில் துவங்கிய ஊர்வலம், கிரி நகர், தனலட்சுமி லே-அவுட், கருவம்பாளையம் சென்று மங்கலம் ரோடு வழியாக, மீண்டும் பள்ளியை அடைந்தது. கல்வி உரிமையை அனைவருக்கும் சமமாக்க வேண்டும்; அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகைகளை, மாணவர்கள் ஏந்திச் சென்றனர். கவுன்சிலர் திருப்பதி, பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் பொன் மருதாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
