தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரையில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்!

மதுரையில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்!

மதுரையில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்!


UPDATED : அக் 10, 2009 12:00 AM

ADDED : அக் 10, 2009 12:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2009 12:00 AM ADDED : அக் 10, 2009 12:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.


மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அக். 10ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மெட்ரிக். மாணவர்களுக்கும் நடக்கிறது.
 
முதலில் வரும் ஆயிரம் மாணவர்களுக்கு தினமலர் சார்பில் பத்தாம் வகுப்பு மாதிரி வினா புத்தகம், உடம்பும், மனசும் நல்லா இருக்கணும் புத்தகம், பேடு, பேனா இலவசம்.

அக்.11ம் தேதி நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சி..., மெட்ரிக்., பள்ளி ஆசிரியர் பழனிவேல்ராஜன் (ஆங்கிலம்), டி நோபிலி மெட்ரிக்., பள்ளி ஆசிரியர் சந்திரசேகரன் (கணிதம்), ஜீவனா பள்ளி ஆசிரியர் .கே. சீனிவாசன் (இயற்பியல்), சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் .சீனிவாசன் (வேதியியல்), சி...., மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கணேசன் (உயிரியல்) பேசுகின்றனர்.

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் விதம், அதிக மதிப்பெண் பெற வழிமுறைகள் குறித்து அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் விளக்குகின்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இப்போதே பொதுத்தேர்வுக்கு திட்டமிட மாணவர்களை அறிவு வளர்க்கும் நாளிதழ் தினமலர் அழைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us