தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துவங்கியது ஜே.இ.இ., தேர்வு

துவங்கியது ஜே.இ.இ., தேர்வு

துவங்கியது ஜே.இ.இ., தேர்வு


UPDATED : செப் 02, 2020 12:00 AM

ADDED : செப் 02, 2020 08:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2020 12:00 AM ADDED : செப் 02, 2020 08:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருவதற்கான, ஜே.இ.இ., எனப்படும் பிரதான நுழைவுத் தேர்வு, ஏப்., 7 - 11 வரை நடப்பதாக இருந்தது.
கோரிக்கை:

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, இந்தத் தேர்வு, ஜூலை, 18 - 23க்கு தள்ளி வைக்கப்பட்டது. அப்போதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாததால், தேர்வு மீண்டும், செப்., 1 - 6 க்கு தள்ளி வைக்கப்பட்டது. மஹாராஷ்டிரா, டில்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதால், தேர்வை நடத்த முடியாது என்றும், மேலும் சில மாதங்களுக்கு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தன.
மாணவர்கள் தரப்பிலும் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், &'போதிய பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கண்டிப்பாக தேர்வை நடத்த வேண்டும்&' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த, 660 மையங்களில், ஜே.இ.இ., பிரதானத் தேர்வு நேற்று துவங்கியது.
சோதனை:

முக கவசம் அணிந்து வந்த மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. தேர்வு அறைக்குள் செல்வதற்கு முன், மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. மாணவர்களில் பெரும்பாலானோர், கிருமி நாசினி எடுத்து வந்திருந்தனர். அறைக்குச் செல்வதற்கு முன், கைகைளை கிருமி நாசினியால் சுத்தப்படுத்தினர்.
தேர்வு மையங்களில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டன. மாணவர்கள், போதிய இடைவெளியில் அமர வைக்கப்பட்டனர். மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க, தேர்வு அறைக்குச் செல்வதற்கு முன், அவர்களுக்கு முழுமையாக சோதனை நடத்தப்பட்டது.
முக கவசம் எடுத்து வராத மாணவர்களுக்கு, தேர்வு மைய ஊழியர்கள் முக கவசங்களை கொடுத்தனர். தேர்வு மையத்தின் நுழைவாயிலில் கிருமிநாசினி வைக்கப்பட்டு இருந்தது. அடையாள அட்டைக்குப் பதிலாக, &'பார்கோடு&' தொழில்நுட்பம் வாயிலாக, மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கிருமி நாசினி:

இந்தத் தேர்வுக்காக, நாடு முழுதும், ஒன்பது லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். காலை, மாலை என, இரண்டு ஷிப்டு களாக தேர்வுகள் நடந்தன. ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்னும், தேர்வு அறை கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டது. ஒடிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு சார்பில் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தடை விதிக்க மறுப்பு:

மஹாராஷ்டிரா மாநிலத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் சார்பில், ஜே.இ.இ., தேர்வை ஒத்திவைக்கக் கோரி, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்வுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.
இது குறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்காக, ஒட்டு மொத்தாக தேர்வுக்கு தடை விதிக்க முடியாது. வெள்ளப் பாதிப்பு உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், தேர்வு நடக்கும் இடத்துக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டால், ஜே.இ.இ., தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையிடம் இது குறித்து கோரிக்கை விடுக்கலாம். இதுபோன்ற மாணவர்களுக்கு, மறு தேர்வை நடத்துவது குறித்து, தேசியத் தேர்வு முகமை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us