தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திட்டமிட்டபடி நீட் தேர்வு

திட்டமிட்டபடி நீட் தேர்வு

திட்டமிட்டபடி நீட் தேர்வு


UPDATED : செப் 05, 2020 12:00 AM

ADDED : செப் 05, 2020 09:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2020 12:00 AM ADDED : செப் 05, 2020 09:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
நீட் தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என பிறப்பித்த உத்தரவை மறு சீராய்வு செய்யக் கோரி ஆறு மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் திட்டமிட்டபடி செப். 13ம் தேதி நீட் தேர்வு நடப்பது உறுதியாகியுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான நீட் மற்றும் ஐ.ஐ.டி. - என்.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ. பிரதான நுழைவுத் தேர்வுகளை என்.டிஏ. எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த ஆண்டு ஜே.இ.இ. பிரதான தேர்வுகள் ஏப்ரல் 7 - 11ம் தேதி வரையிலும் நீட் தேர்வு மே 3ம் தேதியும் நடத்தப்பட இருந்தது.
கொரோனா பரவல் காரணமாக ஜே.இ.இ. பிரதான தேர்வுகள் ஜூலை 18 - 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு செப். 1- 6ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.இதேபோல் நீட் தேர்வு ஜூலை 26ம் தேதி ஒத்திவைக்கப்பட்டு செப். 13ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.
கொரோனா பரவல் குறையாத நிலையிலும் மழை வெள்ளத்தால் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஏற்கனவே இந்ததேர்வுகளை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் &'போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வுகளை கண்டிப்பாக நடத்த வேண்டும்&' என உத்தரவிட்டது. இதையடுத்து ஜே.இ.இ. பிரதான தேர்வுகள் கடந்த 1ம் தேதி முதல் பாதுகாப்பு நடவடிக்கைளுடன் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் ஆளும் ஆறு மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் கூறியிருந்ததாவது:

ஜே.இ.இ., நீட் தேர்வுகளால் மாணவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்கள் சமுதாயத்துக்குமே நோய்த்தொற்று அச்சுறுத்தல் உள்ளது. மாணவர்கள் வாழ்வதற்கான உரிமையை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. அதேபோல் கொரோனா பரவலுக்கு இடையே தேர்வுகளை நடத்துவதில் உள்ள நடைமுறை கஷ்டங்களையும் கவனத்தில் கொள்ளவில்லை. ஜே.இ.இ. தேர்வுக்கு மொத்தம் 660 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மையம் ஒன்றிற்கு 1443 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நீட் தேர்வு 3843 மையங்களில் நடக்க உள்ளது. மையம் ஒன்றிற்கு 415 மாணவர்கள் பங்கேற்பர். இத்தகைய எண்ணிக்கையில் மாணவர்கள் கூடுவதே தொற்று பரவக் காரணமாகிவிடும்.தொற்று குறையாத நிலையில் மத்திய அரசு தேசியத் தேர்வுகளைநடத்துவது அறிவுக்கு விரோதமானது. தன்னிச்சையானது. அதனால் தேர்வுகளை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷண், பி.ஆர்.கவாய் கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 
அப்போது மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் கூறியதாவது:

சீராய்வு மனுக்களையும் அது தொடர்பான ஆவணங்களையும் கவனமாக பரிசீலித்தோம். தகுதி அடிப்படையிலும் ஆறு மனுக்களை பரிசீலித்த போது அவை விசாரணைக்கு உகந்தது அல்ல என முடிவு செய்தோம். அதனால் மனுக்களைத் தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதையடுத்து செப். 13ம் தேதி நீட் தேர்வு நடப்பது உறுதியாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us