UPDATED : அக் 22, 2020 12:00 AM
ADDED : அக் 22, 2020 10:06 PM
அ நிறம் | அளவு
லண்டன்:
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், நடப்பாண்டிற்கான உலகளாவிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகும், 10 பேரின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
இதில் முதற்கட்டமாக வெளியிடப்பட்ட ஏழு பேரில், நம் நாட்டின் மஹாராஷ்டிரா வின் சோலாப்பூர் மாவட்டம், பரிதேவாடி கிராமத்தின், தொடக்கப்பள்ளி ஆசிரியரான ரஞ்சித்சிங் திகாலே, 31, இடம் பெற்றுள்ளார். ஆசிரியர் பணியில் இருப்போருக்கு, சர்வதேச அளவில் வழங்கப்படும் மிக உயரிய இவ்விருதின் பரிசுத்தொகை, 7.5 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
