தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துகிறீர்களா?

ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துகிறீர்களா?

ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துகிறீர்களா?


UPDATED : பிப் 27, 2021 12:00 AM

ADDED : பிப் 27, 2021 05:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2021 12:00 AM ADDED : பிப் 27, 2021 05:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வயது வேறுபாடின்றி, இணையதளத்தை இன்று பலரும் பயன்படுத்தும் நிலையில், ஆன்லைனை பாதுகாப்பாக பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு அனைவரிடமும் உள்ளதா? என்றால் நிச்சயம் இல்லை. கல்வியறிவு உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனால் ஏராளமான வசதிகள் இருந்தாலும், அதற்கு இணையாக ஆபத்துகளும் உள்ளன. 
இதுகுறித்து அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், &'தினமலர்’ நாளிதழ் இலவச விழிப்புணர்வு வெபினாரை, 28ம் தேதி காலை 10.30 முதல் 12 மணி வரை நடத்த உள்ளது. 
இதில், குழந்தைகள், மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆன்லைனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?,  சைபர் கிரைம், ஹேக்கிங் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?, சோசியல் மீடியாக்களை பயன்படுத்துவது எப்படி?, ஆன்லைனில் இடையிடையே வரும் போலி விளம்பரங்களால் வரும் ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?, சைபர் குற்றங்கள் குறித்து முறையிட யாரை அணுகுவது?, டிஜிட்டல் உலகில் உங்கள் தகவல்கள் திருடப்பட்டால் செய்ய வேண்டியது என்ன? வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது எப்படி? உட்பட  பல்வேறு சந்தேகங்களுக்கும் நிபுணர்கள் பதில் அளிக்கின்றனர். 
கேள்விகளை பதிவு செய்யுங்கள்!

சைபர் பாதுகாப்பு குறித்த உங்களது சந்தேகங்களை https://kalvimalar.dinamalar.com/online-seminar/ இணையதளத்தில் பதிவு செய்யலாம். அவற்றிற்கு, ஐ.பி.எஸ். அதிகாரி டாக்டர் எம். ரவி, பேராசிரியர் கிருபா சங்கர், சைபர் பாதுகாப்பு நிபுணர் சையத் முகம்மது ஆகியோர் பங்கேற்று விளக்கமளிக்கின்றனர். 
இந்த நிகழ்ச்சி தினமலரின் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களிலும், கல்விமலர் இணையதளம் வாயிலாகவும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us