UPDATED : மே 05, 2021 12:00 AM
ADDED : மே 05, 2021 03:44 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்:
தொழில் நுட்பக் கல்விக்கான இந்தியன் சொசைட்டி பார் டெக்னிக்கல் எஜூகேஷன் (ஐ.எஸ்.டி .இ., ) தமிழ்நாடு பிரிவு 2020ம் ஆண்டு மாநில விருது திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த பாலிடெக்னிக் மாணவர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி கணித போட்டியில், பி.ஏ.சி.ராமசாமிராஜா பாலிடெக்னிக் மாணவர்கள் ராமசுப்பிரமணியன் முதல் பரிசு, பாலகிருஷ்ணன் மூன்றாம் பரிசு, தொழில் நுட்ப போட்டிகளில் லோகேஷ் முத்துமணி, மெக்கானிக்கல் மாணவர் மாரீஸ்வரன் தேர்வு பெற்றனர். இவர்களை கல்லுாரி ஆட்சி மன்ற குழு தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா, ராம்கோ கல்விக்குழும தலைவர் வெங்கட்ராஜ், முதல்வர் ஸ்ரீனிவாசன் பாராட்டினர்.
