UPDATED : மே 05, 2021 12:00 AM
ADDED : மே 05, 2021 03:49 PM
புதுடில்லி:
இம்மாதம் நடக்கவிருந்த, ஜே.இ.இ., மெயின் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி., போன்ற, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு நடத்தப்படும், ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில், வழக்கமாக நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக, இம்மாதம் நடக்கவிருந்த, ஜே.இ.இ., மெயின் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் குறையாததால், இம்மாதம், 24 - 28ம் தேதி வரை நடக்கவிருந்த, ஜே. இ.இ., மெயின் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக, மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. &'ஏப்ரல், மற்றும் மே மாதத்துக்கான, ஜே.இ.இ., மெயின் தேர்வு, தொற்று பரவல் குறைந்த பின், அடுத்தடுத்து நடத்தப்படும்&' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
