தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கொரானாவுக்கு இலவச தெரபி!

கொரானாவுக்கு இலவச தெரபி!

கொரானாவுக்கு இலவச தெரபி!


UPDATED : மே 21, 2021 12:00 AM

ADDED : மே 21, 2021 08:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2021 12:00 AM ADDED : மே 21, 2021 08:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொரோனாவால் பலரும் பல விதத்தில் பாதிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில், உளவியல் ஆலோசனை மற்றும் சிகிச்சை மிகவும் அவசியமாகிறது. இதனை உணர்ந்த, ஐ.ஐ.டி., கரக்பூர் முன்னாள் மாணவர்கள் உட்பட ஒரு குழுவினர், கோவிட்-19 தொடர்பான மனஅழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து விடுபட பொதுமக்களுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
ஐ.ஐ.டி.,கரக்பூரின் முன்னாள் மாணவர்களான ஜெய்ப்பூரைச் சேர்ந்த சாக்சி ஷா மற்றும் லாரன்ஸ் லவ்தீப் ஆகியோர் தொடங்கியுள்ள இந்த முயற்சியின்படி, 30 முதல் 40 நிமிடங்கள் வரை 50  சிகிச்சை அமர்வுகளை தகுதிவாய்ந்த உளவியலாளர்களைக் கொண்டு வழங்குகிறது. 
முற்றிலும் இலவசமான இந்த ஆன்லைன் அமர்வுகள் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வழங்கப்படுகிறது. 12 பேர் கொண்ட இக்குழு, பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் மக்களைச் சென்றடைவதாக தெரிவிக்கும் அவர்கள் www.goodlives.in/covid-relief என்ற இணையதளத்தின் வாயிலாக நாடுமுழுவதிலும் உள்ள மக்கள் பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us