UPDATED : மே 31, 2021 12:00 AM
ADDED : மே 31, 2021 09:09 PM
அ நிறம் | அளவு
பல்லடம்:
சளி, காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி உள்ளோரை, வீடு வீடாக சென்று கண்டறியும் பணி துவங்கியுள்ளது.
பல்லடம் வட்டாரத்தில், 80க்கும் அதிகமான அரசு துவக்க, நடுநிலை பள்ளிகள் உள்ளனஇவற்றில், 300க்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் வேலை பார்க்கின்றனர். இதில், புள்ளியப்பம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தயக்கமின்றி முதல் ஆளாக கணக்கெடுப்பு பணிக்கு வந்தார். இதன் தொடர்ச்சியாக, இதர துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை சார்ந்த ஏழு ஆசிரியர்கள் களத்தில் இறங்கினர்.
வட்டார கல்வி அலுவலர் சுமதி கூறுகையில், &'&'முக கவசம், கையுறைகள் அணிந்து பாதுகாப்புடன் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருப்பமுள்ள ஆசிரியர்களையும் வரவேற்கிறோம்,&'&' என்றார்.
