தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யாருக்கு அறிவாற்றல் அதிகம்?

யாருக்கு அறிவாற்றல் அதிகம்?

யாருக்கு அறிவாற்றல் அதிகம்?


UPDATED : மே 31, 2021 12:00 AM

ADDED : மே 31, 2021 09:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2021 12:00 AM ADDED : மே 31, 2021 09:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குறை மாத பிரசவம் அல்லது எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு (ஐ.கி.யூ.,) குறைவாக இருப்பதாக பிரிட்டனின் வார்விக் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் 18-30 வயதுக்குட்பட்ட 1978 முதல் 1995 வரை பிறந்தவர்களில் 2135 இளைஞர்களிடம் &'ஐ.கி.யூ...&' திறன் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 1068 பேர் குறை மாதம் அல்லது குறைந்த எடையில் பிறந்தவர்கள். 1067 பேர் சரியான மாத அளவில் பிறந்தவர்கள். 
இதில் குறை மாதத்தில் அல்லது சராசரி எடையை விட எடை குறைவாக பிறந்தவர்களின் &'ஐ.கி.யூ.,&' திறன் சரியாக 88 புள்ளிகளாக உள்ளது. இது மழுமையான மாதம் மற்றும் சரியான எடையில் பிறந்த குழந்தைகளின் &'ஐ.கி.யூ.,&' திறனை விட 12 புள்ளிகள் குறைவாக உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
எடை குறைந்து பிறந்த குழந்தைகளுக்கு சராசரி &'ஐ.கி.யூ.,&' திறன் அளவை எட்டுவதற்கு கல்வியில் நீண்ட கால கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது. குழந்தையின் சரியான கர்ப்ப காலம் என்பது 37-41 வாரம். இதில் பிறந்த குழந்தைகளையும் இதை விட முன்னதாக 28-32 வாரம் அல்லது 1.5 கிலோ எடைக்கு குறைவாக பிறந்த குழந்தைகளின் &'ஐ.கி.யூ.,&' திறனை இந்த ஆய்வில் ஒப்பிட்டு உள்ளனர். இது ஏற்கனவே ஐரோப்பியாவின் ஐந்து நாடுகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் எடுக்கப்பட்ட எட்டு ஆய்வுகளை பகுப்பாய்வு செய்து வெளியிடப்பட்டுள்ளது.
உலகளவில் நடக்கும் பிரசவத்தில் 37 வாரத்திற்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் 10 சதவீதமாக உள்ளன. இவ்வகை குழந்தையின் இருதயம் நுரையீரல் முழுமையான வளர்ச்சி பெற்றிருக்காது. இதன் காரணமாக பிரிட்டனில் ஆண்டுதோறும் 1500 குழந்தை மரணம் ஏற்படுகிறது. அமெரிக்காவில் குழந்தை மரணங்களில் 17 சதவீதத்துக்கு இப்பிரச்னை காரணமாக அமைகிறது. என ஆய்வு தெரிவிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us