UPDATED : ஜூலை 02, 2021 12:00 AM
ADDED : ஜூலை 02, 2021 04:33 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை:
மானாமதுரை வட்டார வேளாண்மை,உழவர் நலத்துறை மூலம் அட்மா- விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரசாயன மருந்துகளை பாதுகாப்பாக பயன்படுத்துதல், பயிர் கழிவு மேலாண்மை குறித்த இணையவழி பயிற்சி ஆலம்பச்சேரியில் உதவி இயக்குநர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது.
மதுரை வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் டாக்டர் கண்ணன், கோவை வேளாண்மை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன் பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பாலமுருகன், சதீஷ் செய்திருந்தனர்.
