UPDATED : நவ 21, 2009 12:00 AM
ADDED : நவ 21, 2009 12:07 PM
அ நிறம் | அளவு
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2008ம் ஆண்டு பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு அரசு சிறப்பு சலுகை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை பதிவை புதுப்பிக்க தவறிய காஞ்சிபுரம் மாவட்டப் பதிவுதாரர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகி வரும் 23ம் தேதிக்குள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். 23ம் தேதிக்கு பின்னர் வருபவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப் படாது என காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜெயபால் தெரிவித்துள்ளார்.
