UPDATED : நவ 26, 2009 12:00 AM
ADDED : நவ 26, 2009 10:04 AM
ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், ரமேஷ் பிரபா பேசியதாவது: நானும் அரசு பள்ளியில் தான் படித்தேன். தமிழ் வழியில் படித்தால் உயர முடியாது என்று இல்லை. உலக வரலாற்றில், தாய்மொழியில் கல்வி கற்றவர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர்.
தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை, 95, 100 மதிப்பெண்கள் வாங்க வைப்பது சாதனை கிடையாது.அரசு பள்ளிகளில், 30 மதிப்பெண்கள், 40 மதிப்பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியரை, 95 மதிப்பெண்கள், 100 மதிப்பெண்கள் வாங்க வைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களின் முயற்சியை பாராட்ட வேண்டும். உழைப்பாளிகள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், தங்களது குழந்தைகள் படித்து உயர வேண்டும் என்ற ஆர்வத்துடன் படிக்க வைப்பர்.பிள்ளைகளும் குடும்ப நிலையை உணர்ந்து, பொறுப்பாக படிப்பதால், நிச்சயம் வெற்றியடைவர். உழைப்பாளிகளின் பிள்ளைகள், கல்வியில் தோற்க மாட்டார்கள்.இவ்வாறு ரமேஷ் பிரபா பேசினார்.
ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் பேராசிரியர் கண்ணன் பேசுகையில், நல்ல வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவது அவசியம் என்பதை மாணவ, மாணவியர் கவனத்தில் கொள்ள வேண்டும். நன்றாக படியுங்கள், நம்மால் நன்றாக தேர்வு எழுத முடியும் என்று உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று வெற்றியடைவீர்கள் என்றார்.
