UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM
ADDED : ஜூலை 06, 2023 10:00 AM
சென்னை:
குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு பெண் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கலையரசி தெரிவித்து உள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
குவைத் நாட்டில் வீட்டு வேலை பணிக்கு 10ம் வகுப்புக்கு கீழ் படித்த 30 முதல் 39 வயதுக்கு உட்பட்ட பணி அனுபவம் பெற்ற மற்றும் அனுபவம் இல்லாத பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் 32 ஆயிரம் ரூபாய். மேலும் 30 முதல் 42 வயதுக்கு உட்பட்ட அரபி் மொழி அல்லது ஆங்கிலம் தெரிந்த ஆண், பெண் சமையலர்கள் தேவை. மாத ஊதியம் 32 ஆயிரம் ரூபாய். வளைகுடா நாடுகளில் செல்லத்தக்க ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ள 30 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண் ஓட்டுனர்கள் தேவை. மாத ஊதியம் 32 ஆயிரம் ரூபாய்.விசா, விமான பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம் மற்றும் இதர சலுகைகள், குவைத் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, வேலை அளிப்பவரால் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், www.omcmanpower.com இணையதளத்தில் பதிவு செய்யலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, சேவைக் கட்டணம் 35,400 ரூபாய். மேலும் விபரங்களுக்கு 044 - 22505886, 22502267 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
