தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., அட்மிஷன்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., அட்மிஷன்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., அட்மிஷன்


UPDATED : ஜூலை 07, 2023 12:00 AM

ADDED : ஜூலை 07, 2023 07:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2023 12:00 AM ADDED : ஜூலை 07, 2023 07:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்வித்தகுதி:
நீட் யு.ஜி., - 2023 தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
மாணவர் சேர்க்கை நாள் அல்லது டிசம்பர் 31, 2023 தேதி நிலவரப்படி, 17 வயது நிரம்பி இருக்க வேண்டும். 
கல்வி நிறுவனங்கள் மற்றும் இடங்கள்:

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற அனைத்து மருத்துவக் கல்லூரிகள்.
* அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 85 சதவீத சேர்க்கை இடங்கள்.* தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்கள்* இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லூரி - கே.கே. நகர்* வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் உள்ள 30 சதவீத இடங்கள் உட்பட விதிமுறைக்குட்பட்ட அனைத்து மருத்துவ இடங்கள் தமிழக மருத்துவ கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன. 
குறிப்பு:
தமிழகத்தில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை இடங்கள் இவற்றில் அடங்காது.
கலந்தாய்வு முறை:
தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும், தனியார் கல்லூரிகள் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இரண்டிலும் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை:
https://ugreg23.tnmedicalonline.co.in/ug/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கான சேர்க்கைக்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூலை 10
விபரங்களுக்கு:
www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us