தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் கவர்னரிடம் மனு

மாணவர்கள் கவர்னரிடம் மனு

மாணவர்கள் கவர்னரிடம் மனு


UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM

ADDED : ஜூலை 08, 2023 09:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM ADDED : ஜூலை 08, 2023 09:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக எம்.பி.ஏ., மாணவ, மாணவிகள் கல்வி நிலையை சரி செய்ய வேண்டி, கவர்னர் மாளிகையில் நேற்று மனு அளித்தனர்.மனு விபரம்:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் எம்.பி.ஏ., பாடப்பிரிவுவிற்கு ஒவ்வொரு ஆண்டும் சென்டாக் மூலம் மாணவர்களை தேர்வு செய்து சேர்த்து வருகிறது. ஆனால், பல்கலையில் எம்.பி.ஏ., பாடத்திட்டத்தை நடத்த தேவையான வகுப்பறைகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட எவ்வித கட்டமைப்பு வசதிகளும் இல்லை. தற்போதுள்ள சூழலில் இந்தாண்டும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாக உள்ளது.இதுகுறித்து பெற்றோர்கள் துணை வேந்தர், கல்வித்துறை செயலரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பல்கலையில் உள்ள குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்து மாணவர்களின் எதிர்கால வாழ்வுக்கு ஒளியேற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us