தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நோடல் அதிகாரிகள் நியமனம்

நோடல் அதிகாரிகள் நியமனம்

நோடல் அதிகாரிகள் நியமனம்


UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM

ADDED : ஜூலை 14, 2023 05:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM ADDED : ஜூலை 14, 2023 05:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
ஓ.என்.டி.சி., என்றழைக்கப்படும், அரசின் பொது டிஜிட்டல் வர்த்தக தளத்தில், தொழில்முனைவோர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சில்லரை விற்பனையாளர்கள் ஆகியோர் இணைவதை ஊக்குவிக்கும் விதமாக, மத்திய அரசு, அனைத்து மாநிலங்களிலும், நோடல் அதிகாரிகளை நியமித்துள்ளது.சிறிய சில்லரை விற்பனையாளர்கள், தங்கள் பொருட்களை, நாடெங்கும் உள்ள வாடிக்கையாளர்களிடம் விற்கவும், வாங்குபவர், எந்த ஒரு தளத்தில் விற்கப்படும் பொருட்களை வாங்கவும், இந்த ஓ.என்.டி.சி., தளம் உதவும்.இதுகுறித்து, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கூட்டு செயலர், சஞ்சீவ் கூறியதாவது:
தொழில்முனைவோர், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சில்லரை விற்பனையாளர்கள் ஆகியோர் இதில் பயன் அடைய, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நோடல் அதிகாரிகள் சிறப்பு திட்டங்களை நடத்த உள்ளனர். மேலும், ஓ.என்.டி.சி., குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உள்ளூர் வணிகங்களை அதில் இணைக்கவும் உதவுவார்கள்.​​ இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us