UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM
ADDED : ஜூலை 28, 2023 09:26 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும், தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம்.உலக சுற்றுலா தினமான செப்.27 ல் விருதுகள் வழங்கப்பட உள்ளது. சுற்றுலா நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலாவை மேம்படுத்துவதில் பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்கள் என வெவ்வேறு பிரிவுகளில் 15 விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஆக.15 கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு 04573-221371, 91769 95871 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
