UPDATED : ஆக 06, 2023 12:00 AM
ADDED : ஆக 06, 2023 10:11 AM
ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் மொழியில் படிக்க ஆர்வம் காண்பித்தனர்.பாராட்டு விழா
ஆனால், படிப்படியாக தமிழ் பயிலும் ஆர்வம் குறைந்து, பல பள்ளிகள் மூடப்பட்டன. பணி ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. இதற்கு, தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு தான் காரணம் என, கர்நாடக அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனவே, கர்நாடகாவில் தமிழ் பயிலும் மாணவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்த, தினமலர் நாளிதழ், சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இதன்படி, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில், மாநில அளவில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியருக்கு, சிம்மாசனம் என்ற தலைப்பில் நேற்று, பாராட்டு விழா நடத்தப்பட்டது. பெங்களூரு தமிழ் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில், சிம்மாசனம் விழா நடந்தது. கர்நாடகாவில், ஒரு தமிழ் நாளிதழ், மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது இதுவே முதன் முறை.சிறப்பு பரிசுகள்
மாநில அளவில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியருக்கு கையடக்க கணினி, ஸ்மார்ட் வாட்ச், விருது, புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. விருது பெற்ற மாணவர்களை, சிம்மாசனம் போன்ற நாற்காலியில் அமர வைத்து, சிறப்பு விருந்தினர்கள் கவுரவித்தனர். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கர்நாடக சுற்றுலா துறை இயக்குனரான தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர், ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு என, மூன்று துறை சார்ந்த சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். தமிழ் மொழியின் அருமை குறித்தும், தமிழால் எவ்வாறு உயர்ந்தோம் என்றும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினர்.மேலும், மூவரும் மாணவர்களுடன் கலந்துரையாடி, நாட்டுப்பற்றை ஊட்டும் வகையில், பல கேள்விகள் கேட்டனர். மாணவர்களும் ஆர்வமுடன் பதில் அளித்து, உடனுக்குடன் சிறப்பு பரிசுகள் பெற்று மகிழ்ந்தனர். வினாடி - வினா போட்டி நடத்தி, அதில் வெற்றி பெற்ற ஆறு மாணவர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. தினமலர் நாளிதழ் சார்பாக பெங்களூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மாணவி ஒருவரை சிம்மாசனத்தில் அமரவைத்த ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு, விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கர்நாடக சுற்றுலா துறை இயக்குனர் ராம் பிரசாத் மனோகர்.
