தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வு

பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வு

பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வு


UPDATED : ஆக 14, 2023 12:00 AM

ADDED : ஆக 14, 2023 10:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2023 12:00 AM ADDED : ஆக 14, 2023 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பெங்களூரில் டெங்கு அதிகரிக்கிறது. எனவே, பள்ளிகளில் ஆய்வு செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி தலைமை சுகாதார அதிகாரி பாலசுந்தர் கூறியதாவது:
ஜூலையில் மழை பெய்ததாலும், பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதாலும், பெங்களூரில் டெங்கு அதிகரித்துள்ளது. மாநகராட்சி சுகாதார கமிஷனர் திரிலோக் சந்திராவின் உத்தரவுப்படி, நடவடிக்கை எடுத்துள்ளோம். டெங்கு நோயாளிகளை, அடையாளம் கண்டு சிகிச்சையளிக்கும் வகையில், பள்ளிகள், குடிசைப் பகுதிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. டெங்கு பரவாமல் தடுக்க, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, ஆஷா ஊழியர்கள், உதவி செவிலியர்கள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவர். கொசுக்களால் டெங்கு பரவுகிறது. எனவே, தண்ணீர் தொட்டிகள், குடங்கள், பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கொசு ஒழிப்பு மருந்தை பயன்படுத்த வேண்டும். வாந்தி, காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் உள்ளோர் தாமதிக்காமல் டாக்டரை பார்க்க வேண்டும். டெங்கு உறுதியானால், சிகிச்சை பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us