UPDATED : செப் 04, 2023 12:00 AM
ADDED : செப் 04, 2023 09:54 AM
அ நிறம் | அளவு
மழை, குளிர் என பல தடைகளை தாண்டி தினமும் நாம் கண் விழிக்கும் முன்பே நம் வீடுகளில் நாளிதழ்களை பத்திரமாக கொண்டு வந்து சேர்ப்பவர்களை பாராட்டும் விதமாக, செப். 4ல் நாளிதழ் வினியோகிப்பவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மின் விளக்கை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், வால்ட் டிஸ்னி, மார்ட்டின் லுாதர் கிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உட்பட பல சாதனையாளர்கள் சிறு வயதில் நாளிதழ் வினியோகித்தனர். அறிவை வளர்க்கும் நாளிதழ்களை வினியோகிக்கும் இவர்களது பணி, கொரோனா ஊரடங்கிலும் தொடர்ந்தது பாராட்டத்தக்கது.
