தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐதராபாத் பல்கலை தேர்தல்!

ஐதராபாத் பல்கலை தேர்தல்!

ஐதராபாத் பல்கலை தேர்தல்!


UPDATED : நவ 07, 2023 12:00 AM

ADDED : நவ 07, 2023 01:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2023 12:00 AM ADDED : நவ 07, 2023 01:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐதராபாத்:
நவம்பர் 9ம் தேதி நடைபெற உள்ள ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் (ஏபிவிபி) முதன்முறையாக முஸ்லிம் மாணவியை வேட்பாளராக களம் இறக்கி உள்ளது.ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் வரும் நவ.,9ம் தேதி நடைபெற உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., மாணவர் பிரிவான அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு ஷேக் ஆயிஷா(24) என்ற முஸ்லீம் மாணவியை வேட்பாளராக களம் இறக்கி உள்ளது. தேர்தலில் முஸ்லீம் மாணவியை ஆர்எஸ்எஸ் அமைப்பு வேட்பாளராக நிறுத்துவது இதுவே முதல் முறை. ஷேக் ஆயிஷா விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பாடப்பிரிவில் பிஎச்டி படித்து வருகிறார்.இது குறித்து ஷேக் ஆயிஷா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 
ஏபிவிபி அமைப்பு எப்போதும் சிறுபான்மையினருக்கும் இந்தியாவுக்கும் ஆதரவாக உள்ளது. நான் ஆந்திராவில் உள்ள மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி., படித்ததில் இருந்து ஏபிவிபியின் அமைப்பில் அங்கம் வகித்து வருகிறேன். எங்கள் கவனம் சிறுபான்மையினர், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களின் நலனில் இருக்கும். அவர்களுக்கு கல்வி முறையாக சென்றடைவதை நாங்கள் உறுதிசெய்கிறோம் என்றார்.ஷேக் ஆயுஷாவை எதிர்த்து, ஐதராபாத்தைச் சேர்ந்த முகமது அதீக் அகமது களமிறங்கி உள்ளார். இவருக்கு கம்யூனிஸ்ட், பழங்குடியினர் அம்பேத்கர் மாணவர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தலில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது இதுவே முதன்முறையாகும்.பல்கலைக்கழகம் நீண்ட காலமாக அரசியலின் மையமாக இருக்கிறது. இங்கு தான், பிபிசி நிறுவனம் தயாரித்த மோடி குறித்த ஆவணப்படம் தடையை மீறி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏபிவிபி அமைப்பு  தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை திரையிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us