UPDATED : பிப் 27, 2024 12:00 AM
ADDED : பிப் 27, 2024 04:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நேருஜி நினைவு நகரவை மேல்நிலை பள்ளியில் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்தது.செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகன் பெருமாள் வரவேற்றார். மாநில பொது செயலாளர் தமிழ்மணியன் பேசினார்.மகளிரணி செயலாளர் மெர்சி நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள் விழா ஏற்பாடு செய்தனர். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முறையை பழைய நிலையில் தொடர வேண்டும். பழைய பென்சன் திட்டம் வேண்டும்.12ம் வகுப்பு வரை சத்துணவு திட்ட விரிவாக்கம் வேண்டும். சரண்டர் விடுப்புக்கான ஊதிய முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.