தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டாக்டர் ஆக வாய்ப்பு

டாக்டர் ஆக வாய்ப்பு

டாக்டர் ஆக வாய்ப்பு


UPDATED : ஜூன் 18, 2025 12:00 AM

ADDED : ஜூன் 18, 2025 12:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2025 12:00 AM ADDED : ஜூன் 18, 2025 12:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிரத்யேக கலந்தாய்வு வாயிலாக நடத்தப்படுகிறது.

தமிழக அரசின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குநரகத்தால் நிர்ணயிக்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு இதற்கான கலந்தாய்வை நடத்துகிறது.

தகுதிகள்:
12ம் வகுப்பில் உயிரியல் பாடத்தை படித்திருப்பதோடு, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம்.

அரசு ஒதுக்கீட்டு இடங்கள்:
தமிழக அரசின் அனைத்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள், இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரி - கே.கே.நகர், தனியார் கல்லூரிகள், மாநில தனியார் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஒதுக்கீட்டு இடங்கள்.

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்:

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற தனியார் மற்றும் சிறுபான்மை கல்லூரிகளில் உள்ள மேலாண்மை இடங்கள் மற்றும் மாநில தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.

இட ஒதுக்கீடு:

அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, வழக்கமான இன அடிப்படையிலான அரசு இட ஒதுக்கீடு, சிறப்பு இட ஒதுக்கீடு, சிறுபான்மை மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர் இட ஒதுக்கீடு ஆகியவை பின்பற்றப்படுகின்றன.

விண்ணப்ப கட்டணம்:

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.500. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.1,000. எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

https://reg25.tnmedicalonline.co.in/ugnew/ எனும் இணையதளம் வாயிலாக தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் மேலாண்மை இடங்கள் ஆகியவற்றிற்கு பிரத்யேகமாக கலந்தாய்வு நடைபெறுவதால் இரண்டிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விபரங்களுக்கு:

https://tnmedicalselection.net/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us