UPDATED : நவ 14, 2025 07:12 AM
ADDED : நவ 14, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர்கள் கழக கூட்டம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு செயலாளர் பெரியதம்பி தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் குணவதி, இணை செயலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். வக்புவாரிய கல்லுாரி முன்னாள் முதல்வர் அப்துல்காதிர், 'சாட் ஜி.பி.டி, கூகுள் ஜெமினி, குரோக் உள்ளிட்ட செயற்கை தொழில்நுட்ப மென்பொருட்களை பயன்படுத்தி படங்கள் மற்றும் வீடியோக்களை எவ்வாறு உருவாக்குவது' என விளக்கினார்.
ஓய்வு பேராசிரியர்கள் பார்த்தசாரதி, மனோகரன், ஷாகுல்ஹமீது, அனார்கலி பங்கேற்றனர்.

