UPDATED : டிச 06, 2025 09:46 AM
ADDED : டிச 06, 2025 09:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
மே-ஜூன் 2025 தொடக்கக் கல்வித் துறை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் டிச., 1 வரை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை காரணமாக சமர்ப்பிக்கும் கடைசி தேதி மாற்றம் செய்யப்பட்டு, டிசம்பர் 8 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு பாடத்திற்கான மறு எண்ணிக்கை கட்டணம் ரூ.205; மறுகணக்கு கட்டணம் ரூ.505 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

